கற்பனை ஹிரோக்கள் (ஹிரோயின்கள்)
இன்றைய காலக்கட்டத்தில் மனிதன் கற்பனை உலகில் கொடிக்கட்டி பறந்துக்கொண்டிருக்கிறான், தன் கற்பனைகளையெல்லாம் நிஜமாக்கி மகிழ்கிறான். பறவைப்போல் பறப்பேன் என்ற கற்பனையில் பிறந்ததுதான் விமானம், என்று மனிதனின் கற்பனைவளத்தை பலவாறுப்போற்றினாலும், குறிப்பாக சிலரின் (என்னையும் சேர்த்து) கற்பனைகள் நம்மால் நினைத்துப்பார்க்கும் போது மிகவும் கேலிக்குரியதாய் மாறிவிடுகிறது. குறிப்பாக கிறிஸ்தவ வாலிபர்களின் கற்பனைக்கூட குறிப்பிடத்தக்கதுதான்.
முழுதாய் பள்ளிப்படிப்பையே முடிக்காத இவனின் கற்பனை மனைவி குறைந்தப்பட்சம் ஐஸ்வர்யாராயின் தங்கையாக இருக்க வேண்டுமாம், அதுவும் சரளமாய் ஆங்கிலம் பேசத்தெரியவேண்டும்.
அப்பத்தான பிரதர் ஊழியத்துல வெளியூர் போகும்போது உதவியாயிருக்கும்..
இப்பேர்ப்பட்டவர்களுக்கு ஐஸ்வர்யாராய் கிடைக்கமாட்டாள், மாறாக ஐஸ் விற்பவள் தான் கிடைப்பாள்.
அதற்காக படித்தவர்களுக்கெல்லாம்தான் அழகான பெண்கள் அமைவார்கள் என அர்த்தமில்லை, உங்களின் கற்பனை வளத்தினை இதில் சற்று குறைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறேன்.
இன்றைய சூழ்நிலையில் வாலிபர்கள் - ஏன் அனைவரும்தான் - அழகான மாடல் அழகிகளை பத்திரிக்கைகளிலும், செய்தித்தாள்களிலும் பார்க்க நேருடிகிறது. இந்த மாதிரியான நேரங்களில் நம் மனதின் கற்பனை.."கட்டினா இதுமாதிரியானப்பொண்ணத்தா கட்டணும்" என்னும் சபலம் தோன்றினால், அதனை நொடியில் மறந்துவிட வேண்டும். மாறாக அப்பெண்ணையே மனதில் கற்பனை தேவதையாய் நினைத்துக்கொண்டிருந்தால், பிற்காலத்தில் கட்டின மனைவியை அவளுடன் ஒப்பிடும்போது மனவிரிசலை ஏற்படுத்திவிடும்.
பெண்கள் மட்டும் கற்பனையில் இளைத்தவர்களா என்ன? இன்றைய பெரும்பாலான பெண்களின் கற்பனை ஹீரோக்கள் மட்டை வீச்சாளர்களும், சுழற்பந்து வீசுபவர்களுமாகிவிட்டது வெட்கக்கேடு. தங்களின் வருங்கால ஹீரோ டிராவிட் போல, சச்சின் போல இருக்கவேண்டும் என்ற ஆசையில் தாங்கள் வாங்கும் நோட்டில் கூட அவர்களின் புகைப்படத்தை புதைத்து வாங்குகின்றனர்.
பிறகு...தங்களுக்கு கிடைப்பவன் கில்லி கூட விளையாட தெரியாத, "சோமாலியா வாலிபன்" என வெட்கி தலைகுனிகின்றனர்.
கற்பனை உலகில் மிதந்துக்கொண்டிருக்கும் அனைவரும், நிஜ உலகிற்கு வாருங்கள். கற்பனை நிறைவேறவில்லை என சோராமல் கருத்துடன் கர்த்தனை தேடுங்கள்.
0 Comments:
Post a Comment
<< Home