Monday, July 25, 2005

யார் பிழை!!!!

யாரிடம் நாம் மிகுந்த நேசத்தை காட்டுகிறோமோ - அவர்களை
சீக்கிரம் இழக்க நேரிடும் - என்பதை
உணர்ந்தேன் பலரின் வாழ்க்கையில்...
அதனால்தானோ உன்னிடம் அன்பை செலுத்தாமல்
போய்விட்டேன் - அம்மா!!!

வீட்டின் கடைக்குட்டி என்றும் அம்மா செல்லம் - ஆனால்
என் வீட்டில் அது தலைகீழ்
என்னிடம் அன்பை பெறாததால் தானோ - அவள்
இப்படி மாறிவிட்டாள்?

குடும்பமாக ஊர் சுற்றி வந்து, கலைப்பில் அனைவரும் தூங்க
நீ மட்டும் குடும்பத்தினருக்காய் சமைக்கிறாய்!
சோம்பலினால் சாப்பிட மறுக்கும் போதும், குழுவாய் உட்கார வைத்து
உருண்டை சோறு உட்டுகிறாய்

ஒரே குடும்பமாய் ஒரே வீட்டில் வாழ வேண்டும் என ஆசைப்பட்டாய்
என் மனகாதலி அதற்கும் சம்மதித்திருப்பாள் ஆனோ நீயோ
அவள் குடும்பத்தை பிரித்துவிடுவாள் அவளை கட்டினால்
என்னை மறந்துவிடு என்றெல்லாம் புலம்பினாய்

மனதிற்கு பிடித்த ஒன்றை உன்னிடம் கேட்டேன் - நீயோ
அதை எனக்கு கொடுக்க மறுத்துவிட்டாய்.
என் மனக்கோட்டைக்குள் ஒலித்து வைத்திருந்த பொருளை
வெறொருவனுக்கு விட்டுவிட முடிவு செய்தேன் - உன் பேச்சால்

சிறுவயது முதற்கொண்டு அநேக பாடுகளை சகித்து என்னை வளர்தவளுக்கு
நான் எந்தவித கஷ்டமுமின்றி வாழவேண்டும் என்ற துடிப்பு
யாரோ காட்டிய கோட்டைப்பெண்ணை எனக்கு மணமுடிக்க எத்தனித்தாள்
என் கோட்டையை ஓட்டையாக்கி புகுந்தேன் அவள் கோட்டைக்குள்

கோட்டை பெண்ணிற்கு என் வீடு மண்மேடாய் தெரிய, குடும்பம் பிரிந்தது
இப்போது அழுகிறாள் என் அம்மா, அவள் துயர்தீர்க்க முடியாமல் நானும்தான்
காலம் செல்ல கோட்டையும் அக்குடும்பத்தை சேர்ந்ததல்ல என்பது புரிந்தது
பாவம் தினம் நான் படும் அவஸ்தையை கண்டு துடித்தாள்- அம்மா

ம்..கோட்டையில் வாழ்ந்தவலாம், சோறு இறங்காது பழங்கள்தான்
அழுகும் பழங்கள் போல் என் சேமிப்பு பாழாய் போனது!
இனி ஒன்றும் செய்யலாகாது பிரிந்தது பிரிந்ததுதானாகிட்டது
மன்னித்துவிடு அம்மா இது என் பிழையல்ல! குழத்தை அழுகிறது
சிறிது நேரம் கழித்து அழைகிறேன்!! போனில் அழுகுரல் நீடித்த்து!!!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad - குகைமனிதன்

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது