Thursday, December 30, 2004

தேடல் ப(ச)டலம்

காதல் வளத்தேன்..காதல் வளத்தேன்...என
காதல் ஜோடிகள் கொஞ்சிக்கொண்டிருந்தன!

பொதுஇடத்தில் பொதுப்பொருளாகிவிட்டாள் - அவள்
"போதும்" என மனம் வராதவனாய் எதையோ தேடிக்கொண்டிருந்தான் - அவன்

நாற்சுவரிக்கிடையே செய்தால் - நறுமணம்
நால்பேருக்கிடையே செய்தால் - நாற்றம்

தங்கள் சுகத்தை துப்பட்டாவால் மூடமுற்பட்டனர் - எனினும்
ஜல்லடை வழியே பார்த்து மகிழ்ந்தனர் - கயவர்கள்

அவர்களை பிறர் கண்களிலிருந்து காப்பாற்ற - சுனாமி
என்ற போர்வையை விரித்தது கடல்!!

பாவம் அதற்கே தெரியாது அதனால்
ஏற்படும் விளைவினைப்பற்றி!!

இன்றும் இறந்த பிணங்களுக்கிடையே தேடுகிறோம்
போர்வையை கேட்டவனை!!! என் தம்பியை!!!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad - குகைமனிதன்

சுனாமி - கார்கில்

இந்தியாவின் உயரத்தை குறைக்க முயல்வது யார்?
சுனாமியா?? இல்லை கார்கில் போரா??

குடும்பத்தில் ஒருவரை கார்கிலில் விட்டோம்.
குடும்பத்தில் ஒருவரை சுனாமி விட்டுவைத்தது.

ஒரே கண்ணாடியாய் இருந்த இந்தியாவை
கிழே போட்டுடைத்து யார்?...ஓ..மாநிலங்கள்!!!

நாங்கள் என்னத்தான் இனம், மொழி என வேறுப்பட்டிருந்தாலும்,
பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒரே பிம்பத்தை காட்டும் உடைந்த கண்ணாடியைப்போல் "இந்தியர்" என்ற ஒரே
ஒருமைப்பாட்டுனர்வோடு இருக்கின்றோம்!!

இயற்கையோ, பிறர்கையோ இந்தியாவில் நுழையவிடமாட்டோம்!
சுனாமியை எதிர்த்து, போர்வீரர்களாய் நின்று மடிந்த வீரநெஞ்சங்களுக்கு கண்ணீர் அஞ்சலி.

நீதி கேட்டு இனி இயற்கையிடம் கைகட்டமுடியாது.
நிதி திரட்டுவோம்! இந்தியாவை வளர்ப்போம்!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad - குகைமனிதன்

Tuesday, December 28, 2004

கறுப்பு ஞாயிறு -26-12-2004

வருங்கால சச்சின்-ஆக வேண்டுமென -- சிறுவர்கள் ---
எதிர்காலம் திடகாத்தமாக இருக்க விரும்பிய -- நடைபாதையினர் --
அன்றாட உணவிற்கு வலைவிரிக்கும் -- மீனவர் ---
இயற்கை அழகினை ரசிக்க சென்ற -- இயற்கை பிரியர் --

என்று எவரையும் விட்டுவைக்காத "சுனாமி" ஆசியாவின் "சாவுமணி"

காலையில் நிலநடுக்க பீதியை ஏற்படுத்தி அநேகரை வீட்டைவிட்டு வெளியேற்றியது.
ஆனால்..கடல் கொந்தளிப்போ அநேகரை அவர்கள் தேகத்தைவிட்டே வெளியேற்றியது..

இதுத்தான் கடலின் இரத்தக்கொதிப்போ!!

என்றைக்குமே பார்க்கப்படாத சேனல்கள்..அன்று தொடர்ந்து நோக்கப்பட்டன.
ஓட்டுகளின் எண்ணிக்கைப்போல் நிமிடத்திற்கு இறப்பு எண்ணிக்கை அதிகரித்தது.
மாநிலங்களுக்கு மாநிலம் இறப்பு எண்ணிக்கை போட்டி!

வருங்கால தலைவர்கள் பலரை காவு வாங்கிய இயற்கை சீற்றமே!
உன் சீற்றத்தினை இதோடு சிறகொடித்துக்கொள்!
பல கனவோடு சிறகடித்து பறக்க விரும்பும் மானிடனின்கனவுகள் நிறைவேற - உன் சிறகினை இனி வளர்த்துக்கொள்ளாதே!!

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சொல்ல இனி நீ உன் வாயை திறவாதே!!
எம்மதப்பேதமின்றி நாங்களே ஒருவருக்கொருவர் வாழ்த்திக்கொள்கிறோம்..

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

குகைமனிதன்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad - குகைமனிதன்

Tuesday, December 21, 2004

கற்பனை ஹிரோக்கள் (ஹிரோயின்கள்)

இன்றைய காலக்கட்டத்தில் மனிதன் கற்பனை உலகில் கொடிக்கட்டி பறந்துக்கொண்டிருக்கிறான், தன் கற்பனைகளையெல்லாம் நிஜமாக்கி மகிழ்கிறான். பறவைப்போல் பறப்பேன் என்ற கற்பனையில் பிறந்ததுதான் விமானம், என்று மனிதனின் கற்பனைவளத்தை பலவாறுப்போற்றினாலும், குறிப்பாக சிலரின் (என்னையும் சேர்த்து) கற்பனைகள் நம்மால் நினைத்துப்பார்க்கும் போது மிகவும் கேலிக்குரியதாய் மாறிவிடுகிறது. குறிப்பாக கிறிஸ்தவ வாலிபர்களின் கற்பனைக்கூட குறிப்பிடத்தக்கதுதான்.
முழுதாய் பள்ளிப்படிப்பையே முடிக்காத இவனின் கற்பனை மனைவி குறைந்தப்பட்சம் ஐஸ்வர்யாராயின் தங்கையாக இருக்க வேண்டுமாம், அதுவும் சரளமாய் ஆங்கிலம் பேசத்தெரியவேண்டும்.

அப்பத்தான பிரதர் ஊழியத்துல வெளியூர் போகும்போது உதவியாயிருக்கும்..

இப்பேர்ப்பட்டவர்களுக்கு ஐஸ்வர்யாராய் கிடைக்கமாட்டாள், மாறாக ஐஸ் விற்பவள் தான் கிடைப்பாள்.

அதற்காக படித்தவர்களுக்கெல்லாம்தான் அழகான பெண்கள் அமைவார்கள் என அர்த்தமில்லை, உங்களின் கற்பனை வளத்தினை இதில் சற்று குறைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறேன்.

இன்றைய சூழ்நிலையில் வாலிபர்கள் - ஏன் அனைவரும்தான் - அழகான மாடல் அழகிகளை பத்திரிக்கைகளிலும், செய்தித்தாள்களிலும் பார்க்க நேருடிகிறது. இந்த மாதிரியான நேரங்களில் நம் மனதின் கற்பனை.."கட்டினா இதுமாதிரியானப்பொண்ணத்தா கட்டணும்" என்னும் சபலம் தோன்றினால், அதனை நொடியில் மறந்துவிட வேண்டும். மாறாக அப்பெண்ணையே மனதில் கற்பனை தேவதையாய் நினைத்துக்கொண்டிருந்தால், பிற்காலத்தில் கட்டின மனைவியை அவளுடன் ஒப்பிடும்போது மனவிரிசலை ஏற்படுத்திவிடும்.

பெண்கள் மட்டும் கற்பனையில் இளைத்தவர்களா என்ன? இன்றைய பெரும்பாலான பெண்களின் கற்பனை ஹீரோக்கள் மட்டை வீச்சாளர்களும், சுழற்பந்து வீசுபவர்களுமாகிவிட்டது வெட்கக்கேடு. தங்களின் வருங்கால ஹீரோ டிராவிட் போல, சச்சின் போல இருக்கவேண்டும் என்ற ஆசையில் தாங்கள் வாங்கும் நோட்டில் கூட அவர்களின் புகைப்படத்தை புதைத்து வாங்குகின்றனர்.

பிறகு...தங்களுக்கு கிடைப்பவன் கில்லி கூட விளையாட தெரியாத, "சோமாலியா வாலிபன்" என வெட்கி தலைகுனிகின்றனர்.

கற்பனை உலகில் மிதந்துக்கொண்டிருக்கும் அனைவரும், நிஜ உலகிற்கு வாருங்கள். கற்பனை நிறைவேறவில்லை என சோராமல் கருத்துடன் கர்த்தனை தேடுங்கள்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad - குகைமனிதன்
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது