என்னை காதலித்தவர்கள் பலர்
என்னால் காதலிக்கப்பட்டவர்கள் பலர்
ஆனால் நான் கட்டினதோ -
இவ்விரண்டில் சேர்க்கப்படாத ஒருவரை...
என்னடா இவ கவிதையா அடிக்கித்தள்ளுறான்னு கடுப்பாகாம படிங்க..
நான் ஒரு நடுதர குடும்பத்தில் பிறந்ந்தவன். பள்ளியிலும் சரி பிற இடங்களிலும் சரி அதிக விளையாட்டுப்பிள்ளையாய் நாட்களை கழித்தேன். வகுப்பு மாணவர்கள் முதல் வகுப்பு ஆசிரியர்கள் வரை
எவரையும் விடாமல் கிண்டலடிப்பது தான் என் பொழுதுபோக்கு.
அடிக்கடி என் ஆலயத்தில் சந்தித்த ஒரு பெண்ணை மனதில் நேசித்தேன், அவளும் என்னுடன் நண்பியாக பழகுவாள். என் மனதில் உள்ள எண்ண ஓட்டங்கள் அவளுக்குத்தெரியாது. நாட்கள் கடக்க அவளின் செய்கையில் பல மாற்றங்களை நான் உணர்ந்தேன். அவள் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது, என்னை அடிக்கடி ஓரக்கண்ணால் கண்காணிப்பது என்று அவளின் செய்கையில் கண்டும், அவை என் மன பிரம்மை என அவற்றை பொறுப்பேடுப்பதில்லை.சுமார் 3 வருடங்கள் காலத்தை இவ்வாறே ஓட்டினேன்.
ஓர் நாள் நான் படிக்கும் பள்ளியில் சேர Admition form கையில் வைத்துக்கொண்டிருந்தாள்.
உங்க school-ல கோச்சிங்லா எப்படி?
ம்..ம் நல்லா இருக்கு..என்ன நீ இங்க சேர போறீயா?..
ஆமா என்றாள்.
அடுத்த வாரத்திலேயே..School Uniform அணிந்து, இரட்டை ஜடையுடன் கண்ணிற்கு குளூமையாக Hi என்று என் முன் நின்றாள்.
சுமார் 1000 பேர் படிக்கும் அப்பள்ளியில், அழகிகளை வரிசைப்படுத்தினால் 5-ற்குள் அவளை காணலாம். விடலை பருவ பையன்களின் கண் அவள் மீதும் பட்டது. எனக்கு அவளை முன்னமே தெரியும் என்பதினாலேயும், அடிக்கடி நாங்கள் சந்தித்து பேசுவதினாலேயும், மாணவர்களே எங்களுக்குள் தொடர்பு
இருப்பதாய் கணித்துக்கொண்டனர்.
ஓர் நாள் என் நண்பன் என்னிடம் வந்து,
டேய் நீ அந்த பொண்ண லவ் பண்றீயா? என கேட்டான்.
ஏண்டா ஏன் கேக்குற? ஒண்ணுல்ல என் friend அவள லவ் பண்ண போறான்னா. நீ பண்ணாட்டி ஒரு ட்ரை பண்ணலாம்னு உன்ன கேக்க சொன்னா?
அதற்கு உடனே பதில் சொல்ல முடியாமல் நான் திணற அருகில் இருந்த என் நண்பன் ஆமாண்டா அவ அவள லவ் பண்றான். அவகிட்ட சொல்லிடு.
பல மாணவர்களிடம் இன்றும் ஒரு கலாச்சாரம் பரயுள்ளது போற்றுதற்குரியது.மாற்றானின் காதலியை எவறும் தீண்டமாட்டார்கள். எனவே அவளின் பாதுகாப்பு வேண்டி, ஆமாம் என நானும் தலையசைத்தேன்.
எங்கு நான் கூறியதை அவளிடம் சொல்லி கேட்கப்போகிறார்களோ என பயந்து அன்று அவள் வீட்டுக்குச்செல்லும் பாதையில் அவளுடன் மிதிவண்டியில் செல்ல தயாரானேன். எப்படி மேலே நடந்த விஷயத்தை அவளிடம் கூறி விவரிப்பது என தெரியவில்லை.
கெரி நா ஒன்னு சொன்னா தப்பா நினைச்சிக்கக்கூடாது
ம்..சொல்லுங்க.
நீ யாராச்சையும் லவ் பண்றீயா?
ஒரு கணம் என்னை மேலிருந்து கீழாக பார்த்த அவள்..ம்..இல்ல..ஏன் கேக்குறீங்க?.
அவளின் பார்வையில் கோபம் வெளிப்பட்டதை உணர முடிந்தது..
இல்ல என் friend உன்ன லவ் பண்ண போறதா சொன்னா..அதான் நா உன்ன லவ் பண்றதா அவகிட்ட சொல்லிட்ட. யாராச்சிம் கேட்டா அதுமாறியே சொல்லு..ஆனா நம்ப friend ஆகவே இருப்போம்.
அவளின் முகம் சிவந்தது.
ஐயோ நா உன்ன லவ் பண்ணல அவங்ககிட்ட இருந்து காப்பாத்தத்தான் அப்படி சொன்னேன், நம்ப friends ஆவே இருப்போம்.
அவள் சற்று தெளிந்தவளாய்,
எனக்கு எத்தனையோ பேர் லவ் லட்டர் கொடுத்துருக்காங்க. ஆனா நா யாருக்கும் YES சொன்னது இல்ல.
ஓ அப்படியா..நா அவ வந்து உன்ன தொந்தரவு கொடுக்கக் கூடாதுன்னுத்தான் அப்படி சொன்ன.
இப்படியே பேசிக்கொண்டு அவளின் வீட்டிற்கு அருகில் வந்துவிட்டோம்.
சரி அப்போ நா கிளம்புறேன் என என் cycle-ஐ 90 டிகிரி திருப்பினேன்.
டென் உனக்கு மட்டும் நா YES சொல்ற, நாளைக்கு ஆலயத்துல சந்திப்போம். என அவளின் சைக்கிளை வேகமாகா வீட்டிற்கு செலுத்தினாள்.
நானோ ஒன்றும் புரியாதவனாய், உள்ளூற குளிரினால் நடுங்கிக் கொண்டிருந்தேன்.அன்று இரவு முழுதும் அதே கற்பனை அவள் என்ன சொல்ல போறா..ஒன்றும் விளங்கவில்லை. அவளை சந்திக்க தயாரானேன்
அவளை கண்டதும் ஒருவித திகில் என்னை தாக்கியது. இவ்வளவு நாட்கள் பழகிய, பேசிய அதே பெண்ணிடம் தான் பேசப்போகிறோம் என்றாலும் ஒருவித எதிர்ப்பாப்பு கலந்த தவப்பில் தத்தளித்தேன்.
தனியே பேசுவதற்கு ஏற்ற இடத்திற்கு வந்தோம். அவள் சடாளென I LOVE YOU என்றாள். நானும் ME TOO என்றேன். வெளியே யாரிடமும் சொல்லவேண்டாம் என்றாள்.சரி என தலையசைத்தேன். சரி நாளைக்கு ஆலயம் முடிந்ததும் நாம் சந்திப்போம் என்றேன்.
அறியா வயதில் ஆசைகள் அலைகளாய் அடிக்க அதில் சேர்ந்து என்னோடு கைப்பிடித்தோர்களை இன்றும் எண்ணிக்கொண்டிருக்கிறேன். மனதில் வண்ணத்துப்பூச்சிகள் வட்டமடித்த நாட்கள் அவை. இன்றும் அவளை சந்திக்கிறேன் அவளுக்கே தெரியாமல், பாவம் அவள் மட்டும் இன்றும் கன்னியாய் நானோ கையில் குழந்தையுடன்.